Friday, April 30, 2010

some more quotes !!!

While i had been in Trichy, saw this beautiful quote in a bus.

நினைக்க மறந்தாலும்,
மறக்க நினைக்காதே !

A perfect reply for this would be :

மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

Movie : Saradha, sung by P.Susheela and P.B.Sreenivas

1 comment:

  1. கவிஞர் கண்ணதாசனின் வரிகள்:

    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா

    [சிந்து பைரவி படத்தில் குடிக்கும்/குட்டிக்கும் அடிமையான JKB அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் சிங்து (சுகாசினி) இந்த பாட்டின் வரிகளை கூறுவாள்].

    அந்த வசனங்கள் (நினைவிலிருந்து):

    JKB: சிந்து நீ ரொம்ப கொடுமையான டீச்சர். விஸ்கி பாட்டிலை பக்கத்தில் வச்சிட்டு 'மறக்கணும்னு' சொல்றே.

    சிந்து: அது தான் உங்களுக்கு பாடம்.

    JKB: குடிய மறக்கணும் ற தா?

    சிந்து: குடியை மட்டும் இல்ல. காதலையும் தான்.

    JKB: யாரு பாடினது?

    சிந்து: கவிஞர் கண்ணதாசன்.

    பாடல் முழு வரிகள்:

    நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா.. கண்ணதாசன்
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா

    (நினைக்கத்)

    மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
    மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
    அன்பே மறையத் தெரியாதா

    (நினைக்கத்)

    எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
    இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
    படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
    படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
    பனியே மறையத் தெரியாதா

    (நினைக்கத்)

    கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
    குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
    பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
    இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
    தலைவா என்னைப் புரியாதா

    (நினைக்கத்)

    (வரிகளுக்கு நன்றியுடன்) http://yezhuththu.com/kavithai/551.html

    ReplyDelete